உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகந்தன்னை நடத்து கின்ற சக்தி எதுவோ-அந்த நலந் திகழுஞ் சக்திக்கு நான் என்று மடிமை ! மலர்களெது மலர்வதெது மணப்பதெதுவோ-அந்த ஒளிர் மிகுந்த சக்திக்குநான் என்று மடிமை! அறிவுஎது அறிவதெது அறிந்ததெதுவோ - அந்த அரிய பெருஞ் சக்திக்கு நான் என்று மடிமை! இன்பமெது துன்பமெது இரண்டு மெதுவோ - அந்த அன்புமிகுஞ் சக்திக்கு நான் என்று மடிமை! முன்னதெது முடியாதெது முடிப்ப தெதுவோ -அந்த வன்மைமிகுஞ் சக்திக்கு நான் என்று மடிமை ! 116