உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம்! நட்டு வளர்த்திட்ட சோளப்பயிர்த் தட்டை முற்றிக் கதிர்பற்றி நிற்கையிலே சிட்டுகள் வந்ததைக் கொத்தித் தின்னாமலே சிங்கா ரப்பெண்பரண் மீது நின்று கட்டுடல் நோவக் கவண் கொண்டு வீசியே கையால் பறைகொட்டி வாய்திறந்து சிட்டுகளச்சோ அச்சோவெனக் கூவிடும் தேன்மொழி கேட்பவர்க் கின்ப மடா! காற்றிலே முல்லைப்பூ வாசம்வர உடன் கன்னி யொருத்தி நடந்துவர சோற்றுக் கலயம் தலையினிலே வேடு சுற்றிய தன்மையில் ஏறிவர ஏற்றம் இறைத்துக் களைத்திட்ட வாலிபன் ஏற்றமதை விட்டவள் பின்புவர ஊற்றுக் கரையில் மர நிழலில் அவர்: உட்காரும் காட்சியோ ரின்பமடா! பட்டு மணத்திட பாக்கு மணத்திட பாவை யவளுடன் தீண்டியதால் தொட்ட கரங்களில் பெண்மை மணத்திட சுந்தரியாளுடன் சேர்ந்து தினம் வெட்சியும் ரோஜாவும் பூத்திட தோட்டத்தில் வேலைதான் செய்வதே காளையர்க்குக் கட்டிலா இன்பம், காலமெலாம் இந்தக் காட்சியைக் காண்பதோர் இன்பமடா! 141