உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நங்கை நங்கையேஉன் புன்சிரிப்பு நட்சத்திரக் கூட்டமடி! தங்கமெல்லாம் உன்றன்மேனி தருமழகைக் காட்டுதடி! ஆற்றுவெள்ளம் போல ஆசை அகத்தில்வந்து மோதுதடி நேற்றுக்கண்ட கண்களுன்னை இன்றுகாணத் தேடுதடி! பூக்களெல்லாம் உன் நினைவை என்றன்நெஞ்சில் சேர்க்குதடி பாக்களெல்லாம் உன்னையன்றிப் பாடவர வில்லையடி! எண்ணமெல்லாம் நீநிறைந்தாய் என்றன் கண்ணில் நீஉறைந்தாய் மண்ணும்விண்ணும் எங்குமுன்றன் மதிவதனம் தெரியுதடி! நங்கையே உன் புன்சிரிப்பு நட்சத்திரக் கூட்டமடி! தங்கமெல்லாம் உன்றன்மேனி தருமழகைக் காட்டுதடி! 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/29&oldid=1744167" இலிருந்து மீள்விக்கப்பட்டது