உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று புகன்றுமே கூடையுங் கைக்கொண்டு ஏகினாள் அழகியும் அவளின் பின்னே சென்ற குழந்தைகள் கேட்டன "அன்னையே பால்சோறு என்றாயே என்ன" என்று! எஜமானர் வீட்டினில் சாப்பிடும் உணவது இனிப்பாய் இருந்திடும்" என்றாளவள்! நிசமாகப் புரிந்தது போலே குழந்தைகள் "நீயதைத் தந்திடு" என்றார் தினம்! நாளைக்கு நாளைக்கு என்றவள் சொல்லினாள் நாளும் வளர்ந்தது தொத்தப் பசு வேளைக்கு வேளை தன் மேனி பெருத்தது மிக்க விரைவில் 'பலப்' பட்டது ! பசுவுக்கு பாப்பாதான் பிறந்திடப் போவதை பாலகர் கேட்டதும் துள்ளினார்கள் ! பசுந்தழை புல்லென்று பறித்தந்த மாட்டுக்கே கொடுத்ததன் கொட்டிலைச் சுற்றி வந்தார்! உறகத்தி லும்பசு கன்றீனும் கனவையே ஒவ்வொரு குழந்தையும் கண்டு வந்தார்! இறக்கும் நி லையிலே இருந்த பசுகன்று ஈன்றிடப் போவதைக் கண்டவர்கள் பக்கிரி மனைவியைப் பாராட்டிப் பேசினர் பசுவும் ஒருதினம் அதி காலையில் மிக்கவ ழகிய கன்றினை யீன்றது மகிழ்ச்சியால் குழந்தைகள் துள்ளினார்கள் ! அந்தநல் வேளையில் எங்கிருந்தோ அங்கு வந்திட்ட பண்ணையார் கண்களிலே கன்றுடன் பகவுந்தான் நிற்பது பட்டது கனைத்துக் குரல் தன்னை மிக உயர்த்தி பக்கிரி தன்னை அதட்டியே கூப்பிட்டு பசுமாட்டை ஓட்டிவா வீட்டுக் கென்றார்! உக்கியு டல்குன்றி ஒன்றுமே தோன்றாமல் ஊமைபோல் நின்றிட்டான் பக்கிரியும் 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/80&oldid=1744228" இலிருந்து மீள்விக்கப்பட்டது