உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னடா சொல்கிறேன் பேசாது நிற்கிறாய் ஏகென் றதட்டினார் மேலும் அவர் மென்னையை ஆத்திரம் வந்து அடைத்திட வேதனையோடு தான் பக்கிரியும் ஆகட்டு மென்றேதன் கொட்டிலை நோக்கியே ஆவேச நடைபோட்டுச் சென்று அங்கே சீகட்டு பாலுடன் நின்ற பசுதன்னை தும்போடு கைப்பற்றி ஓட்டலானான்! பக்கிரி மனைவிதான் கன்றைச் சுமந்திட்டாள் பாலகர் பார்த்துள்ளம் வெம்பி நின்றார்! சக்கரம் சுற்றியே கொட்டிலை விட்டுமே ! செல்ல மறுத்தது அந்தப் பசு உள்ளக் கொதிப்பெல்லாம் ஒன்றாய்த் திரட்டியே ஓங்கி யடித்துமே ஓட்டலானான்! கள்ள மில்லாப்பசு கண்ணீரும் மல்கியே கடுகி நடந்த தப்போ தினிலே! பால்சோறு கேட்டநற் பாலகர் வீட்டிற்குள் பதுங்கியே மௌனமாய் வீற்றிருந்தார்! பால்மாடு பத்தோடு பதினொன்றாய்ப் பண்ணையார் பட்டியை நிரப்பிற்று மகிழ்ந்தாரவர்! 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/81&oldid=1744229" இலிருந்து மீள்விக்கப்பட்டது