பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை இசைப் பேரறிஞர், கலைமாமணி மதுரை எஸ். சோமசுந்தரம் அவர்கள். திருவாவடுதுறை ஆதீனவித்வான். டில்லி சங்கீத நாடக அகாடமி உறுப்பினர். அண்ணுமலைப் பல்கலைக் கழக இசைத்துறை முதன்மையர். எனது பெருமதிப்பிற்குரிய உயர்திரு. கு.சா. கிருஷ்ண மூர்த்தி அண்ணுர் அவர்களை நாற்பது ஆண்டுகளாக நன்கு அறிவேன். அதுவும் புதுக்கோட்டை மிருதங்க கஞ்சிரா மகாமேதை தட்சினமூர்த்தி ஐயா அவர்களின் இல்லத்தில் முதன்முதலாக சந்திக்கும் பாக்யம் பெற்றேன். அந்தக் காலத்திலிருந்து அவர்கள் கூடவே பாடிக் கொண்டிருப் பேன். அப்போதே அவர்கள் எழுதிய பல பாடல்களை மனனம் செய்து பாடுவேன். குறிப்பாக 1946ம்-ஆண்டில் அவர்கள் எழுதி வெளியிட்ட இசையின்பம்’ என்னும் பாடல் தொகுப்பு நூல் ஒன்றைப் பெற்று அதில் உள்ள அநேக பாடல்களை நான் கச்சேரி செய்யத் தொடங்கிய அந்தக் காலத்திலிருந்தே இசையரங்குகளில் தவருது பாடுவேன். அப்பாடல்களுக்கு இசையுலகில் நல்ல வரவேற்பு இருந்தது. பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி, அவர்கள் அழகாகப் பாடும் திறமையும் பெற்றவர் என்பதையும் இசை யுலகம் நன்கறியும். தற்சமயம் 'அமுதத் தமிழிசை” என்னும் பெயரில், சுர-தாளக், குறிப்புகளுடன் அவர்கள் எழுதிய நூறு பாடல்கள் உள்ள இசைப்பாடல் தொகுப்பு நூல் ஒன்று வெளிவருதல் கண்டு அளவற்ற மகிழ்ச்சியடைகின்றேன். இப்புத்தகத்திலுள்ள ஒவ்வொரு பாடலையும் நான் நன்கு ஊன்றிக் கவனித்துப் படித்துப் பார்த்தேன். இதில்