(பாட்டு-52) சாயிபாபா வழிபாடு - ராகம்-தோடி தாளம்-மிச்ரசாப்பு (8 வது, மேள கர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் ( எடுப்பு) பாபா நின் பதமலர் நிழல் தருவாய்-என் பவ வினை களைந் தருள்வாய்-மகாசாயி =(பாபா) (தொடுப்பு) தாபாதிகள் தீர்த்து-மனச் சஞ்சலப் பேய்தனை மாய்த்து காவாய்த் திருவருள் மழையெனப் பொழிந்து கருண நிதியே கடைக்கண் திறந்து = (பாபா) (முடிப்பு) வானவர் தானவர் யாவரும்சேர்ந்த ஓர் ஞானியாய் அவதரித்தாய்-இந்த வையகத்தோர் எல்லாம் உய்திடவே ஞான மார்க்கம் நீயே வகுத்தாய்நானிருக்கப் பயமேன் எனவே செவி தான் இனிக்க மொழிந்தாய்-அந்தத் தேனினும் இனியசொல் நம்பி வந்தேன்-எந்தன் சிந்தையெல்லாம் நிறைந்தாய்-மகாசாயி =(பாபா) (எடுப்பு) 1. ஸ்ாரி காமா ; தநிஸ்ா | நிc த மர ழகரிஸா தநீ | பா . பா - . நி - ன் | பத மலர் நி-ழல் தரு | ஸ்ா ; ; ; ; ஸ்ர்ரிழி . வாய். * * சாயி iro | =
பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/125
Appearance