பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 161 சமூகம் (பாட்டு-71) ராகம்-சந்த்ர ஹசிதம் தாள ம்-ஆதி - (28. வது மேளமான அரிகாம்போதி’யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்ரிகமதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதமகரிஸ் (எடுப்பு) நெஞ்சம் பதைக்க வில்லையா-தமிழ்நாட்டின் நிலயை நினைக்கும் போது-தமிழா உன் -(நெஞ்சம்) (தொடுப்பு) பஞ்சமும் நோயும் பகைமையும் நமக்குள் - வஞ்சமும் சூழ்ச்சியும் வளர்வதைக் காண உன் = (நெஞ்சம்) (முடிப்பு) 1 வகுப்பொரு கோடி வகுத்துவிட்டார்-மத - வாதப் புராணம் பல தொகுத்துவிட்டார்-கண்டோர் நகைக்கும் இழிநிலையைப் புகுத்திவிட்டார்-தமிழ் - நாட்டின் பெருமையெல்லாம் அழித்து விட்டார்-அந்தோ உன்-(நெஞ்சம்) 2 விடியுமுன் எழுந்து மாலைவரை-ரத்த வேர்வை சிந்த உழைத்தும் கூலி போதாத கொடுமையால் தொழிலாளி வருந்தி நைந்திடப்-பகற் கொள்ளையடித்துச் சிலர் உள்ளம் களிக்கக் கண்டுன் -(நெஞ்சம்) JW・A0ー11