பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிவு ரை சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன் 102 பாடல்கள் உள்ள 'இசையின்பம்" என்னும் நூல் ஒன்று வெறும் ராக-தாளக்குறிப்புடன் வெளியிட்டேன். அதி லுள்ள அநேகம் பாடல்களை திரு.தண்டபாணி தேசிகர். திரு. மதுரை. எஸ். சோமு. திரு. சிதம்பரம் ஜெயராமன், திருமதி: கே.பி. சுந்தரம்பாள் போன்ருேர், இசையரங்குகளிலும், வானெலியிலும், இசைத்தட்டுகளிலும் முழங்கிப் பெருமை சேர்த்தனர். - - - அதற்குப்பின் இப்போது சுர-தாளக்குறிப்புக் களுடன் ஒரு நூறு பாடல்கள் கொண்ட"அமுதத் தமிழிசை” என்னும் பாடல் தொகுப்பு நூல் வெளியிடப்படுகிறது. இது உரைநடை நூல்களை வெளியிடுவதைப் போல் எளிதான காரியமல்ல. இதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி-உழைப்பு, கால விரயம், பொருட்செலவு இவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் வியாபார ரீதியில் இதல்ை கிடைக்கும் பயன் ஏமாற்றமாகத் தான் இருக்கும். ஆயினும், இதன்மூலம் நமக்குக் கிடைக்கும் ஆத்மதிருப்தி இருக்கிறதே அது மகத்தானதாகும். இதைப் போல் இன்னும் பல தொகுப்புகள் உருவாகும் அளவுக்கு நான் இயற்றியுள்ள பாடல்கள் உண்டு. அவைகளை யெல்லாம் வெளியிட்டுப் பரப்ப வேண்டுமென்ற பேராசை யும் உண்டு. ஆனல் அதற்கான வாய்ப்பும் வசதியும் வேண்டாமா? இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிப் பெருமை சேர்த் திருக்கும் மாண்புமிகு மேலவைத்தலைவர் சிலம்புச்செல்வர் டாக்டர். ம.பொ.சி. அவர்களுக்கும், ஆசியுரை, மதிப்புரை என்ற பல்வேறு தலைப்புக்களில் பாராட்டுரைகள் வழங்கிச்