பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

 சிறப்பித்துள்ள இசைமேதைகள் அனைவருக்கும், இசை யமைத்துத் தந்த திருமதி. குருவாயூர் பொன்னம்மாளுக்கும். சுரக்குறிப்பு எழுதி உதவிய திரு. ஏ. ஆர். கண்ணன் அவர்களுக்கும், இந்நூலை அழகுற அச்சிட்டுத் தந்த நாவல் ஆர்ட் அச்சக உரிமையாளர். திரு. நாரா. நாச்சியப்பன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியதாகும். இந்நூல் வெளியீட்டிற்கு ஓரளவு பொருளுதவிபுரிந்து ஊக்குவித்த இயல்-இசை-நாடக மன்றத்திற்கும் எனது நன்றி உரியதாகும். குறிப்பாக, 'அமுதத் தமிழிசை”ப் பாடல்கள் இசை யரங்குகளிலெல்லாம் எதிரொலிக்க வேண்டுமென்பது எனது பேரவா. இசை உலக மேதைகளும், இளம் பாடகர் களும் இசைத்துறை மாணவ-மாணவியரும், இசைக் கல்லூரி களும், இதிலுள்ள பாடல்களைப் பயன்படுத்தி, எனது முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமாறு கனிவோடு கைகூப்பி வேண்டுகின்றேன். கு. சா. கிருஷ்ணமூர்த்தி