பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 179 (பாட்டு-80) ராகம்-தர்பார் தாளம்,ஆதி (22. வது மேளமான கரகரப்ரியா’வில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிஸ்தபமரிககரிஸ் (எடுப்பு) தேசம்தான் நமது தெய்வம்-அதனைத் தினமும் புகழ்ந்து வந்தனை செய்வோம் = (தேசம்) (தொடுப்பு) வீசும் அலைகடல் கிழக்கும் மேற்கும் விளங்கும் குமரி தெற்கும் இமயம் வடக்கும் சூழும் =(தேசம்) (முடிப்பு) 1 கங்கை யமுனைக் கோதாவரி சிந்து காவிரி கிருஷ்ணு கிளை பலவாய் விரிந்து எங்கும் எழில் குலுங்கும் இயற்கை நலம் சிறந்து இனிய பயிர்வளமும் கனிவகை நிறைந்து நல்கும் = (தேசம்) 2 தங்கம்முதல் பஞ்ச லோகக் கனிகளும் தரளம்முதல் உயர் நவமணித் திரல்களும் சங்கீதம் சிற்பம் ஒவியக்கலைகளும் தரணி புகழ்க் கவிதைக் காவியங்களும் நிறையும் =(தேசம்) 3 சங்கரர் புத்தர் ராமாநுஜர் வள்ளுவர் தவமுனிவர் பலர் வகுத்த நன்னெறிவழி துங்கமுயர்ந்திடும் அண்ணல் மகாத்மா தூய்மையும் வாய்மையும் தொடர்ந்திடும் பாரத =(தேசம்)