பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 183 (பாட்டு-82) ராகம்-கெளரிமனேகரி தாளம்-கண்டசாப்பு (23. வது மேள கர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) இந்தநாடுதான் எங்கள் செந்தமிழ் நாடு இன்ப வளங்கள் எல்லாம் எங்கும் நிறைந்த நாடு -(இந்த) (தொடுப்பு) அந்தநாள்தனிலே சொந்தம் பேசிஇங்கே வந்தவர்க்கெல்லாம் நல்ல வாழ்வளித்த நாடு -(இந்த) (முடிப்பு) 1 முல்லைக்குத் தேர்தந்த பாரிவள்ளலும்-தன் முகம்மலர்ந்து தலைகொள்ள மொழிந்த வள்ளலும் நெல்லியை ஒளவைக்குத் தந்து மகிழ்ந்த வள்ளலும் நீலமயிலுக்கு ஆடை தந்த வள்ளலும் வாழ்ந்தது =(இந்த) 2 மேருவைச் செண்டுகொண் டறைந்திட்ட சோழனும் மேதினி புகழ்கொண்ட மனுநீதிச் சோழனும் வீரனம் ராஜராஜ விஜயாலயச் சோழனும் வெற்றிசேர்க் கங்கை கொண்ட சோழனும் வாழ்ந்தது -(இந்த) ஆரியர் செருக்கினை அடக்கிமுடி மேற்கல்லை சேரநாடு கொண்டு தெய்வக் கோயில் கண்ட தீரனம் செந்தமிழ்ச் செல்வனென்னும் எங்கள் சேரன்செங் குட்டுவன் செங்கோல் செழித்ததுவும் -(இந்த)