பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 189 (பாட்டு-85) ராகம்-குந்தலவராளி தாளம்-ஆதி (28. வது மேளமான அரிகாம்போதி’யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்மபநிதஸ் m அவரோஹனம்-ஸ்நிதபமஸ் (எடுப்பு) தமிழ் தமிழ் தமிழென்று சொல்லு-செந் தமிழ் முழக்கம் செய்து உலகையெல்லாம் வெல்லு = -(தமிழ்) (தொடுப்பு) தமிழ் தமிழ் என்று சொன்னல்-அதற்குள் அமிழ் தமிழ் தமிழ்தென்னும் ஒலியெழக் காண்பாய் நீ= - -(தமிழ்) (முடிப்பு) 1 வான்மறை கண்டது தமிழே-கலை வளங்கள் நிறைந்தது தமிழே-நறுந் தேனென இனிப்பது தமிழே-நமது - செல்வத்திலெல்லாம்தலை சிறந்தது தமிழே செந்= -(தமிழ்) 2 தன்உமிழ் நீரற்றல் வீழ்வோம்-அதுபோல் தமிழ் சிதைந்தால் தமிழர் தாழ்வோம்-நமது இன்னுயிர் தந்தேனும் காப்போம்-தமிழ் ஏற்றத்திற் கென்றேநாம் இனிஉயிர் வாழ்வோம் = -(தமிழ்) 3 உலகின் முதன்மொழி தமிழே-சங்கம் ஒம்பி வளர்த்த செந்தமிழே-இங்கு நிலவும் ஐம்பெருங் காப்பியங்கள்-எல்லாம் நிகழ்த்தியதும் நமது நிகரற்ற தமிழே= -(தமிழ்)