பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 195 (பாட்டு-88) ராகம்--ரவிச்சந்திரிகா தாளம்-ஆதி (28. வது மேளமான அரிகாம்போதி'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகமதநிதஸ் அவரோஹணம்-ஸ்நிதமகரிஸ் (எடுப்பு) வந்தனள் எந்தன் செந்தமிழ்க் காதலி சிந்தனை உலகினிலே-ஒரு நாள்= (வந்தனள்) (தொடுப்பு) அந்தரம் வாழும் மடந்தையர் போலே அருள் தவழும் விழிகளோடென் முன்னலே =(வந்தனள்) (முடிப்பு) 1 சிந்தாமணியிழை சிரத்தினில் ஆட செவிகளில் குண்டல கேசிகள் ஆட செந்தாமரைவாய் திருக்குறள் பாட செந்தளிர்க் கரத்தில் வளையாபதி ஆட = (வந்தனள்) 2 இந்துவை நிகர்த்திடும் எழில்முகம் காட்டி இனியசெந்தேன் தமிழ் இசையமுதுரட்டி செந்திரு மேனியில் மணிமேகலைப் பூட்டி சிலம்பணி புனைந்திடும் செல்வச் சீமாட்டிக -(வந்தனள்)