பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 209 (பாட்டு-95) ராகம்-மதுவந்தி தாளம்-ஆதி (59. வது மேளமான தர்மவதியில் பிறந்தது) ஆரோஹணம்-ஸகமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) காதல் கொண்டேன் எழில் கன்னித் தமிழ்க்குமரி காரிருள் காயும் இளம் கதிரே உன்மேல் -(காதல்) (தொடுப்பு) பூதலம் போற்றும் மொழிகளுக் கெல்லாம் ஆதியும் நீயே இன்ப ஆழியும் நீயே-உன்மேல் -(காதல்) (முடிப்பு) 1 புதுப்புனலே புனலில் பூத்ததோர் தாமரைப் பூவே பூவின் சுவைமிகும் தேனே-என் இதய வண்டு உந்தன் அமுதத்தேன் பருகி இன்பமணம் நுகர அன்பு பெருகியதால் -(காதல்) 2 இடர்களைந்திடும் கூர் வாளும் நீயே.-என் எண்ணமும் செயலும் வாழ்வும் நீயே திடமளிக்கும் அறிவின் சக்தியும் நீயே செல்வமெல்லாம் தர வல்லவள் நீயே -(காதல்) .யு.க,-14