பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/228

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 217 வணக்கம் ராகம்-கெளடமல்லார் தாளம்-ஆதி (28. வது மேளமான 'அரிகாம்போதி'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்ரிமபதஸ் அவரோஹணம்-ஸ்நிதமபதமகரிஸ் (எடுப்பு) வணக்கம் நல்வணக்கம்-வான்மழைக்கும் மாமலைக்கும் செங்கதிர்க்கும் திங்களுக்கும்-என் -(வணக்கம்) -- (தொடுப்பு) நினைக்கும் போதெல்லாம் உளம் இனிக்கும்-வளர் கலைக்கும் உயர்நிலைக்கும் வாழ்வளிக்கும் முத்தமிழ்த் தாய்ப் பதம் -(வணக்கம்) (முடிப்பு) 1 வான்மறை நல்கிய வள்ளுவன் பாத மலர்க்கும் வணக்கம் தேன்சுவை சிந்தும் கம்பநாடன் திருவடிக்கும் வணக்கம் புகழ் மணக்கும் ஐம்பெருங் காப்பியம் அனைத்திற்கும் வணக்கம் மிக இனிக்கும் செந்தமிழ்ச்சங்கநூல் தொகுப்பிற்கும் என் அன்பு கலந்த =(வணக்கம்) 2 நம் தமிழ்நாட்டிற்கும் வணக்கம் செந்தமிழ்ச் செல்வர்க்கும் வணக்கம் தமிழ்க் கொடிக்கும் வணக்கம் இமிழ்கடற்கும் வணக்கம் உலகனைத்தும் பயிர் செழிக்கும் உயிர் வளர்த்தே எழில் கொழிக்கும் உன்னதமாகிய இயற்கை- . அன்னேயின் அழகிய-திருவடி தனக்கும் -(வணக்கம்)