பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை முத்தமிழ்ப் பண்ணையின் முத்தான வெளியீடான 'அமுதத் தமிழிசை'யை மீண்டும் மறுபதிப்பாகத் தருவதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்ருேம். தமிழிசை இயக்கத்திற்கு வலுவூட்டும் மிக அருமையான நூறு பாடல்களும் நூறு ராகங்களைக் கொண்டதாக அமைந்திருப்பது இந்நூலுக்குரிய சிறப்பாகும். - - இசைப்பாடல் தொகுப்பு நூல் ஒன்று, ஐந்து ஆண்டுகளில் மறுபதிப்பாக வருவதே இதன் சிறப் பிற்குச் சான்றாகும். - இந்நூலின் முதற்பதிப்பிற்கு வழங்கிய அறிஞர்கள் இசை மேதைகள் ஆகியோரின் அணிந்துரை, ஆய்வுரை, சிறப்புரை ஆகியவற்றை மறுபதிப்பிலும் அப்படியே வெளியிடுவதில் பெருமையடைகின்றோம். நூலாசிரியருக்கும், இசை அமைத்துக் கொடுத்த அருட்பா அரசியாருக்கும். இந்நூலை அழகுற அச் சிட்டுக் கொடுத்த நாவல் ஆர்ட் அச்சக நிர்வாகத் திற்கும் என்றும் எங்கள் நன்றி உரியதாகும். பதிப்பகத்தார் -