பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசியுரை சங்கீத கலாநிதி D.K. பட்டம்மாள் பூர். கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி, அமுதத் தமிழிசை என்னும் பெயரில் அச்சிட்டுப் புத்தக வடிவமாக வெளியிட்டிருக்கும் கீர்த்தனைகளைப் பார்வையிட்டேன். எல்லாவற்றையும் விபரமாகப் பார்க்க முடியாவிட்டாலும், முடிந்தவரை அநேகக் கீர்த்தனைகளைப் பார்த்தேன். பாடு வதற்கு மிகவும் சுலபமான முறையில் திருமதி, குருவாயூர் பொன்னம்மாள் அவர்களால் ஸ்வர-தாளக், குறிப்புகள் அமைக்கப்பெற்று, அச்சிடப்பட்டிருக்கிறது. மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ள சாகித்யங்கள் அர்த்த புஷ்ட்டியுடன் இருக்கின்றன. ராகங்களும் பொருத்த மாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாதனைக்கு பூரீ கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர் களையும், திருமதி குருவாயூர் பொன்னம்மாளேயும் மனநிறை வோடு பாராட்டுகின்றேன். இறைவன் இவர்களுக்குத் தீர்க்க ஆயுளேத் தந்து, இன்னும் இம்மாதிரி அரிய சாகித்யங்களைக் கற்பனை செய்து இசைவடிவில் பல நூல்கள் வெளியிட அருள்புரிவாராக, கோட்டுர்புரம். D.K. பட்டம்மாள் சென்னை-600 085. 29–7–80. தொலைபேசி: 4 1 4 1 29,