பக்கம்:அமுதவல்லி.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 99 __________________________________

அன்புப் போதையும் இன்பப் போதமும் பெற்றுத் திகழும். பொன் னுக்கு அரசியாகவும், பெண்ணுக்கு அரசியாகவும் விளங்கின மகளுக்கு நடை வண்டி கொடுத்தவர்கள் அவளை ஈன்று வளர்த்து வந்தவர் களே தாம், என்றாலும், ஒர் அதிசயம் என்னவென்றால், பருவம் தாவணியையும், காலம் பருவத்தை யும் பரிசளித்தன, அவள் 'சமைந்தாள்'. திறந்தவெளி அரங்கமாக இயங்கி வந்த ஊரும் உலகமும் அன்று தொட்டு அவன் வரை சுருங்கிக் கொள்ள பழகிக் கொண்டன . அவள் மனம் புழுங்கினாள், விரக்தி வின் நெட்டுயிர்ப்பும், வேதனையின் குமைச்சலும் அவளது பருவத் துடிப்பைக் கிண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் தருணத்தில், ஆசை முகமொன்றை ஆர்வம் பொங்க மனத் திரையில் வரைந்து ஓவியமாக்கி அனுபவித்து ஆறுதல் பெற்றாள் அவள்மச்சான் இந்தக் கணக்குக்கு பர்மாவிலே மாந்தனையிலேருந்து திரும்பினதும், எங்கழுத்திலே மஞ்சக் கயிறு கட்டிடுவாங்களாமே!’ என்று தனக்குத் தானே வினா வடிவில் விடை அமைத்துப் பூரித்துப் போயிற்று பெண் உள்ளம். கனவின் வடிவிலே காதல் வளர்ந்தது; காதலின் உருக்கொண்டு கனவு நீண்டது. காதலும் கனவும் ஒட்டாத இரு துருவங்கள் என்கின்றார்களே? ஐயை அறிவாளோ?

        ஆஞ்சநேயன் 
    முன்னைப் பழங்கதை ஆயிற்றே இத்தனையும்: பொன்னரசி விம்மினாள். ஏன்? வாழ்க்கைப் பாதையில் இருபத்தெட்டு மைல் கற்களைக் கடந்து வந்தவளுக்குத் 

துயரம் ஒரு கேடா, என்ன?

பொன்னரசியின் செவிப்புலன், எங்கிருத்தோ மிதந்து வந்து மோதிய அழுகைக் குரலை நுகர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/101&oldid=1378335" இருந்து மீள்விக்கப்பட்டது