பக்கம்:அமுதவல்லி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 102 அமுத வல்லி

குஞ்சுக் குழந்தை பிஞ்சுக் கைகளையும், பஞ்சுப் பாதங்களையும் பயன்படுத்தி முன்னேறி அந்தப் பஞ்சையிடம் பால் சேகரம் செய்ய எத்தனித்துக் கொண்டிருந்தது. பேசாத பொற் சித்திரத்தை நெஞ்சுடன் நெஞ்சு இறுத்தி இறுக அணைத்த வண்ணம் சத்தைக் கூட்டி எழுந்தாள் பொன்னரசி. எடுத்த முயற்சியில் தோல்வி கண்ட சிசு வீரிட்டு அலறியது. தாய்க்காரி அப்போது மட்டும் எப்படியோ விழித்து விட்டாள்: "சீ!தூத்தேரி!” என்று ஏசிய பின் குழந்தையை அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள்; காறித்துப்பினாள்; எச்சிலைத் துப்பியவள் மீதும் அந்த எச்சில் துளியொன்று பட்டது. கோடை மழைக்கு கட்டியங் கூறியது கொடி மின்னல்.

         துர்க்கை
 புதுக்கோட்டை பஸ் நிலையம் உதய சூரியனின் கருணைப் பார்வைக்கு ஆளானது. வாகன ஊர்திகளும் பிரயாணிகளும் கலந்த ஓர் அவசர-அவசியச் சூழலிலே, காலமெனும் திரி இயற்கையென்னும் விளக்கிலே நின்று நிதானித்து எரிந்து கொண்டிருந்து. முத்திநெறி அறிந்த தவமுனியின் இதயம் போல் நிர்மலமாகக் காட்சி கொடுத்து விண். துறவு மேற் கொள்ள நெஞ்சுரம் பூண்டவன், அதே மனநிலையில் செயற்பட இயலாமல் சலனமுற்றுத் தவிப்பதைப் போன்று இருந்தது மண்.
 விடிவெள்ளி விண்ணைத் தொட்டதும், துாற்றல் மண்ணைத் தொட்டது. பொன்னரசி, சீர்குலைந்து பழுதுபட்ட நடுத்தெரு துர்க்கையின் சிலை நிலையில் இருந்தாள். நனைந்த மாதிரியே கிழிந்த துணி உலர்ந்து விட்டது. அவளுடைய தளர்ந்த மனத்தில்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/104&oldid=1376447" இலிருந்து மீள்விக்கப்பட்டது