உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதவல்லி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்

அக்கணம் செந்நிறம் காட்டிய கேள்வி இது ஒன்று மட்டுந்தான்: நான் எத்தனையோ வாட்டி செத்து மடிஞ்சுப்பிடத் துணிஞ்சப் போவெல்லாம், என்னோட கனா பலிக்குமிங்கிற ஆசை மனசிலே ஓடினதாலே தானே நான் உசிர் மேலேயும் ஆசை வச்சுக் கிட ஆரம்பிச்சேன்! ஆனா, இனிமே என் நெனைப்பு எங்கே பலிக்கப் போவுது?...ஆமா, மெய் தான்! இனி நானும் மக்கி மடிஞ்சு மண்ணாகிப் போனாப்போலே தான்!...

 ஆளுடைய அடிகளாரின் கவியின் ஒரு பகுதியை

சாது ஒருவர் அடித்தொண்டையில் ஏற்றிப் பாடிக் கொண்டிருந்தார்.

'தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி!

 வழுவு இலா ஆனந்த வாரி போற்றி! 

அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி!

 முழுவதும் துறந்த முதல்வா போற்றி!

நாணயம் புழங்கத் தொடங்கிற்று; காவி வண்ணம் கொண்டிருந்தவர் திசை திரும்பினார்.

 குலதெய்வத்தின் நினைவு பொன்னரசிக்கு ஏற்பட்டது. முன்னடியான், சன்னாசி சங்கிலிக் கறுப்பன் துணையுடன் நின்ற ஆதி பிரமரின் பயம் செறிந்த பாவம் தோன்றியது.
 கண்களிலிருந்து உதிரம் கொட்டியது.
 புழுதி மண்ணில் ரத்தத் துளிகள் சிந்தித் தெறித்தன.
 பொன்னரசி தலை குனிந்த போழ்தில், உருவான புழுதி மண்ணில் பச்சைக் கொடியின் சித்திரம் ஒன்று
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/105&oldid=1376452" இலிருந்து மீள்விக்கப்பட்டது