இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104 அமுத வல்லி
உருக்காட்டி அமைந்திருப்பதைக் கண்ட போது, சப்த நாடிகளும் அடங்கிப் போனாற் போலிருந்தது.
‘மகனே என்னை மன்னிச்சிட மாட்டியா?”
நூறடி ஆழமும் நூற்றுக் கணக்கான சுழிகளும் இணைந்த அந்தப் புதுக்குளம் அவள் வரவுக்குக் காத்திருந்தது!
ஐயை
இனி :
கதையின் கரு:
பொன்னரசி அப்பொழுது பதினெட்டு வயது கொண்ட வாலைக் குமரி, கன்னி கழிந்த கட்டம். கட்டழகு சொக்க நின்றாள். ஆப்பிள் பழத் தோல் அவளது உடலில் போர்த்தப் பெற்றிருந்தது. சுண்டினால் ரத்தம் தெறிக்கும். சிலட்டூர் 'இளசு'கள் அவளுக்காக 'மோப்பம்' பிடித்தன. ஆனால் அவளோ தன் அன்பு அத்தானுக்காகத் தவம் கிடந்தாள். மலைமகளின் தவம் பலித்து, பிறைசூடிக் கிடைத்த வரலாற்றை அவள் அறிந்திருந்தாள். ஆகவே அது போன்று தன் இதயக் கனவும் ஈடேறும் என்பதாக எண்ணினாள்; எண்ணி மகிழ்ந்தாள். அவளுக்குரிய 'முறை அத்தானை' ஏந்தி வரும் கப்பலுக்காக அல்லும் பகலும் விழி நோகக் காத்திருந்த நேரத்தில், எதிர்பாராத வெடியொன்றை வீசிச் சென்றான் செந்நிறப் பில்லைச் சேவகன். அழுதாள்: அழுதாள்; அழுது கொண்டேயிருந்தாள்: மாண்ட அத்தான் மீளமாட்டான் என்று தெரிந்தும் கூடப் புலம்பினாள். தந்தை அனுப்பிய இலங்கைச் சீமைப்பணம்