பக்கம்:அமுதவல்லி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 贾0岳

அவளுடைய நெஞ்சுப் புண்ணை ஆற்றவில்லை; வயதான அன்னையின் அன்பு அவளது ஆறாத் துயரத்தினைப் போக்கடிக்கும் அரு மருந்தாக அமையக் காணோம். நீலக் கடலும் நீள் விழிகளும் ஒரே இனம்! .

         காட்டேரி
 அந்தி சந்திப் பொழுது. அப்படிப்பட்ட நடு வேளைப் பகுதியிலே ஒருநாள், தண்ணீர் கொணர குளத்திற்குச் சென்றாள் பொன்னரசி. வயல் வரப்பைப் பார்த்து திரும்பிக் கொண்டிருந்தான் கங்காணி மகன் கந்தசாமி அந்தம் நிறைந்த எழில் வதனம்; அரும்பு மீசை, குறும்புப் பார்வை: இரும்பு உடல். அக்கரைச் சீமை சீராட்டி வளர்த்த செல்வச் சீமானின் புதல்வனல்லவா? சின்ன வயசில் 'கட்டுப் பாண்டி' ஆடிய காலத்தே அவன் அவளைக் கண்டது உண்டு, இனம் கண்டு கொண்டான்; ஆனால் அவள் பார்வை தட்டுப்பட்டதும், அவனுக்கு இனம் விளங்க மாட்டாத ஒரு கிளர்ச்சி; நிறைவு.
 புன்னகையும் புது நிலவும் அவர்கள் இருவரையும் அந்தரங்கமாகச் சந்திக்க உதவின. எட்டாப் பழமாக இறக்காத தேனாக இருந்து வந்த பொன்னரசியின் உருவம் கந்த சாமியின் புகைப்படக் கருவிக்குத் தப்ப வில்லை. ஊர்க் கோடியில் சந்தித்து வந்த அவன் ஒரு நாள் மதியத்தில் அவளுடைய வீடு தேடி வந்து சேர்ந்தான்.

‘பொன்னரசியை நான் கட்டிக் கிடலாம்னு எண்ணியிருக்கேன். அப்பாவுக்கு கண்டிக்கு தபால் போட்டிருக்கேன். தாக்கல் வந்த கையோடு கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட வேண்டியதுதான்!’

அ-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/107&oldid=1376472" இலிருந்து மீள்விக்கப்பட்டது