பக்கம்:அமுதவல்லி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 அமுத வல்லி

 செய்தியை வெளியிட்டான். பொன்னரசியைப் பெற்றவளிடம்.
 தன் புருஷனுக்குக் கடிதம் எழுதி இதுபற்றி முடிவு சொல்வதாகத் தெரிவித்தாள் பொன்னரசியின் தாய்.
 நாலிலே இரண்டிலே வந்துபோனான் கந்தசாமி, அந்த எழிலரசியைக் காண. ஒரு நாள் உச்சிப் பொழுது. பொன்னரசி மட்டுமே வீட்டில் குத்தியிருந்தாள் அவள் அன்னை சந்தைக்குச் சென்றிருக்கும் விவரமும் கிடைத்தது. குளித்து முழுகி வந்திருந்த பொன்னரசி ஈரப் புடவையைக் களைந்து மாற்றுடை உடுத்துக் கொண்டு கையில் ரவிக்கையுடன் உள் திண்ணையில் அமர்ந்த போது, கந்தசாமியின் புகைப்படத்தின் நினைவு எழவே. அதை எடுத்து வந்து அழகு பார்த்தவாறு இருந்தாள். நிழற்படத்துக்குரியவனே நேரில் வந்ததும், அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. வந்தவன் அவளுடைய படத்தைக் காட்டினான். ஆர்வம் துள்ள பொன்னரசி தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, கந்தசாமி இளமை துள்ளும் பொன்னரசியின் அழகைப் பருகிக் கொண்டிருந்தான். பருவ மலரின் நெடி மண்டைக்கு ஏறியது. அவளுடைய கண்களுடன் அவனது விழிகள் அந்தரங்கம் பேசின. அவள் பிணங்கினாள். “நாளைக்கு உன் கழுத்திலே தாலி கட்டப் போறவன் தானே?. சரின் னு சொல்லு, பொன்னரசி!" என்று கெஞ்சினான். ஒப்பவில்லை. கடைசியில், பலாத்காரத்தின் பிடியில் 'பெண்மை' கருத்தழித்தது. காலத்தின் வளர்ச்சியோடு, அவளுள் கரு வளர்ந்தது. செய்தி அறிந்த அவள், செய்தியை உரியவனிடம் சேர்ப்பிக்க விரைந்த போது, ஏச்சும் பேச்சும் தான் கிடைத் தன. "நீ துப்புக் கெட்ட கள்ளி! உன்னை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/108&oldid=1376479" இலிருந்து மீள்விக்கப்பட்டது