பக்கம்:அமுதவல்லி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூ வை எஸ். ஆறுமுகம்

நானா கண்ணாலம் பண்ணிக்குவேன்?...முடியாது!" என்று தீர்ப்பு வழங்கினான் கந்தசாமி. அடுத்த நாள் இரவிலே அவனை மயக்கிப் பொய் நாடகம் ஆடி பழி தீர்த்துக் கொள்ள காட்டேரியாக மாறி வெறி கொண்டு சென்ற போது, அவன் கடல் கடந்த தகவல் கிடைத்தது.

 'நடத்தை கெட்டவள்னு அவப்பேர் எடுத்த பின்னாலே இனிமே நான் இந்த ஊர் நாட்டிலே தங்கவே மாட்டேன்!” என்று முடிவெடுத்து, பிறந்த வீடு துறந்து, இரவோடு இரவாக கால் போன திசைக்குச் சென்றாள் பொன்னரசி. மறு தினம் பிற்பகல் பொழுதிற்கு அவள் புதுக்கோட்டையைத் தரிசித்தாள்: அணிந்திருந்த நகைகள் தரிசனம் தந்தன: சுமந்திருந்த கரு அவளைச் சித்திரவதை செய்தது. சீ! சனியன்!” என்று ஆத்திரப்பட்டாள், உருத் தெரியாக் கரு மீது. அண்டிய இடம் அடைக்கலம் தந்தது. ஏழைக் கிழவி ஒருத்தி நிழல் தந்தாள். பொன்னும் மணியும் படி அளந்தன. ஓரிரவு கருவைக் கரைக்க விஷப் பச்சிலையைப் பொன்னரசி தயாரித்த போது, அவ் விஷயம் அம்பலமானது. கிழவி தடுத்து விட்டாள். “நீ யோசிக்காம நடந்ததுக்கு அது என்னா செய்யும், பாவம்" என்றாள்.
 
 பொன்னரசிக்குப் பேறு காலம் நெருங்கிய போது ஆதரவு கொடுத்து வந்த கிழவியும் நமனுலகு ஏகினாள்.
         காளி
 பொன்னரசியின் வாழ்க்கைப் பாதையில், மீட்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டது. கிழ வயிடம் 'நடந்த கதை'யை இதயம் திறந்து சொன்னது போல
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/109&oldid=1376486" இலிருந்து மீள்விக்கப்பட்டது