பக்கம்:அமுதவல்லி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதவல்லி




1. அமுதவல்லி

பிறந்த மண்ணைவிட்டு வள்ளிசாக ஐம்பத்திரண்டு நாட்கள் கழிந்தபின் பட்டணத்துக்குப் புறப்பட்டேன். எனக்கெனக் காத்திருந்த ‘போட் மெயில்’ என்னை அழைத்துச் சென்றது; ஆனால் இராஜ இராஜ சோழனையும், பெரிய கோயிலையும் மறந்து போயிற்று. அந்த மறதி வாழட்டும். சரித் திரத்தைப் புரட்டுபவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கக்கூடாது பாருங்கள். அதனால்தான் ரெயில் அப்படிச் செய்திருக்க வேண்டும்.

இயற்கையை மிஞ்ச முனைகிறது செயற்கை. இந்நிலையைப் பற்றிப் பெட்டியில் அமர்ந்திருந்தவர்கள் கண்டபடி பேசிக் கொண்டிருந்தார்கள். வான்வெளிக் கப்பலைப் புகழ்ந்தார் ஒருவர். அழகிகளின் அந்தப்புரத்தை அப்படியே அம்பலப்படுத்தும் புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டவருடைய ‘மூளை’யைச் சிலாகித்தார் சாயுபு ஒருவர். இன் னொருவர், திரை நட்சத்திரம் தேவி. சினிமா உலகிலிருந்து விடை’ பெறப் போவதைக் குறித்து வருத்தம் தெரிவித்தார். கலக்கம் அவரது கண் களிலே காணப்படாமற் போனாலும், பேச்சில் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/11&oldid=1027320" இலிருந்து மீள்விக்கப்பட்டது