பக்கம்:அமுதவல்லி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 111

   மூச்சுப் பிடித்தது; எப்படியோ எழுந்தாள் பொன்னரசி. கந்தலும் கிழிசலும் கொண்ட துணி மூட்டை அவள் கக்கத்தில் இருந்தது. கத்திமுனை தோலில் உரசியது. அவளது வைரியான கந்தசாமியின் படமும் அவளுடைய படமும் ஞாபகத்தில் ஒடின; அவை என்றோ எப்படியோ அவளிடமிருந்து பிரிந்து விட்டனவே...? நடந்தாள்.
    கீழராஜ வீதியிலிருந்து மடங்கி, சென்ற வழி வழியே மறுகி நடந்தாள் அவள். புதுக்குளம் வந்தது. படி ஏறிச் செல்ல அடி வைத்த போது, தொங்கல் வீட்டில் கல்யாணம் நடந்த தை அறிந்து அங்கு சென்றாள்; வெள்ளை பூசிய சுவர்களும் வாழைத்தார் கட்டின காவணமும் அவளைக் கவர்ந்தன. மாப் பிள்ளையைப் பார்த்தாள். இளம் வயசுக்காரன், அவளுக்கு வேறு நினைவு பளிச்சிட்டது. 'என் கண் ணுக்கும் இன்னம் ஆறேழு வருஷம் போனா இது போல கண்ணாலம் ஆக வேணுமே!"
    அன்ன தானம் வழங்கப் பட்டது. ஏழைகளோடு வரிசையாக அவளும் நின்றாள். பிறகு என்ன தோன்றிய தோ, அங்கிருந்து நகர்ந்து விட்டாள். “நான் சாப்பிட்டு, உசிரோடிருந்து யாருக்கு என்ன ஆவப்போவுது ?... என் புள்ளையை இத்திணி வருசத் துக்கு அப்பாலேயா இனிக் கண்ணாலே காணப் போறேன் ? ... ஊரிலே ராசாங்கமாக் குடியும் குடித் தனமுமா இருக்க வேண்டிய நான் இப்பிடி நாயா அலையனும்னு எந்தலையிலே எழுதியிருக்கு. அங்கா ளம்மா! என்னை உங்கிட்டே அழைச்சுக்கிடு. எம்மவன் எங்கிருந்தாலும் அவனை நிறைஞ்ச ஆயுசுக்குக் காப்பாத்து."
  மஞ்சி விரட்டு நடந்து முடிந்த இடம் தென்பட்டது. நடந்தாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/113&oldid=1377178" இலிருந்து மீள்விக்கப்பட்டது