பக்கம்:அமுதவல்லி.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முத்துமாரி

"அம்மா!... அம்மா..!”

  பொன்னரசி விழிகளை விரித் தாள். ஆலமரத்தடியில் யாரோ சிறுவனின் மடியில் தலைசாய்ந்து கிடப்பதை உணர்ந்தாள். அவசரப்பட்டு எழ முயன்றாள். நெற்றி மேட்டிலிருந்து வேதனை குரல் தந் தது. எழுந்தமர்ந்தாலும் முதலில் தென்பட்டவை: பக்கத்தில்சிதறிக் கிடந்தரத்தத்துளிகள்: துடிக்கும் இதயத்தோடு அந்தப் பையனை ஏறிட்டு நோக்கினாள் வழிந்த கண்ணீருடன் அவன். "அம்மா' நீங்க பிழைச்சிட்டீங்க.. இனிப் பயமில்லை. இந்தாங்க... ஒரு மடக்கு காப்பித் தண்ணி குடியுங்க,’ என்று சொல்லிக் காப்பிக் குவளையை அவள் கரம் தொட்டு நீட்டினான்.
  பொன்னரசிக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டது. அவளுடைய பெற்ற வயிறு என்றுமே அடைந்திராத அமைதியைப் பெற்றது. மார்பகத் தில் பால் வெள்ளம் பாயத் துடிப்பது போலவும் உணரலானாள். இமை மூடாமல் அவனையே பார்த்தாள், பத்து அல்லது பதினோரு வயசான அச்சிறுவன் ராஜா மாதிரி இருந்தான். செம்மறியாட்டுக் கும்பல் காவிக் கோலம் திகழ அவன் பின்னே அணி வகுத்திருந்தது. அவனது நெற்றிப் பக்கம் கூர்ந்து நோக்கினாள். அந்த இடத்தில் பெரிய தழும்பு காணப்பட்டது. “ஆதி பிரமரே, இவனே தான் எம் மகனா-?”
   தான் மயங்கிச் சுருண்டு புரண்ட நிகழ்ச்சி அப்போது தான் பொன்னர சிக்கு விளங்கியது, அவள் அவன் கதையைக் கேட்டாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/115&oldid=1377203" இருந்து மீள்விக்கப்பட்டது