பக்கம்:அமுதவல்லி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 அமுதவல்லி __________________________________

தாய்க்கு வைத்த குருதிக் குங்குமம் அச்சமுறத் துலங்கிக் கொண்டிருந்தது.

   "பொன்னரசி. என்னை மன்னிச்சிப்பிடு. இப்போதே என்னோட வந்திடு. நான் உன்னைக் காப்பாத்துறேன்... நம்ம மகனையும் கண்டு பிடிப்போம்...!” என்றான் அவன் - கந்தசாமி.
   பொன்னரசி கையிலிருத்த கத்தி மின்னியது. ரத்தக் காட்சியைக் கண்டதும் அவள் மனத்தில் புயல் நீங்கிய அமைதி கனிந்ததோ? கத்தி நழுவியது. பையனுடைய கையைப் பிடித்து அழைத்து வந்தாள் “பாவம்; மன்னிச்சிடு; அந்த ஆள் எக்கேடு கெடட்டும்" என்று வேண்டினாள் அவள்.
  புழுதி வழியே ரத்தத் துளிகள் சுவடு காட்டிக் கொண்டேயிருந்தன.
  “அப்பனைக் காட்டினிக; என் ஆத்தாவையும் காட்ட மாட்டிங்களா, அம்மா?" என்று விம்மிய பையன் அவளைப் பரிதாபம் இழையோடே நோக்கலுற்றான்.
 "தம்பி, பழிக்குப் பழி வாங்கத் தானே உன் அம்மாவை நீ இப்ப தேடுறே?...” .
  “ஊஹகும் அவங்களை மன்னிச்சிடுவேன்; அவங்க என் தாய்!". . .
  அடுத்த கணம் என்ன எண்ணினானோ, தன் முடிச்சிலிருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்வை யிட்டான் அவன்.
   “ஆத்தா...!”
  நெஞ்சில் பாய்ச்சிக் கொள்ள ஓங்கிய கத்தியைத் பிடுங்க முனைவதற்குள், செந்நிறம் பீறிடத் தலைப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/118&oldid=1377228" இலிருந்து மீள்விக்கப்பட்டது