பக்கம்:அமுதவல்லி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 5. இனி. . .!

   ஊர்ப் பஞ்சாயத்துக் கேணியடி திமிலோகப்பட்டது-!
   பூங்காவனத்தின் ஆசை மச்சான், ஆணழகன் சிங்காரவேலன் லாரியில் தாறு மாறாக அடிபட்டுச். சாகப் பிழைக்கக் கிடக்கிறானாம்!
  ஊர் வாய் பேசியது; பேசுகிறது.
  பாவம் டி! நம்ம பூங்காவனம் -! நீ சொல்லுறது நூத்திலே ஒரு சேதி தாண்டி, அஞ்சலை! தன்னோட உசிருக்குசிரான மச்சான் பேரிலே உசிருக்கு உசிராகப் பாசமும் நேசமும் வச்சிருக்கிற பூங்காவனம், விதியோட எழுத்திலே பாவப்றபட்ட சென்மம் ஆயிடாமல், ஆத்தா அங்காளம்மையோட புண்ணி யத்தினாலே மஞ்சளும், மஞ்சள் தாலியும் ஆசீர்வாதம் செய்கிற நல்ல புண்ணியவதியாக ஆகிப் பூடனும்!"
  “ஆமாடி-ஆமா!’
  நல்ல மனங்கள் உருகின.
  இளைய வெயில் உச்சிப் பனைக்குத் தாவியது.
  உண்மைக்கு அசலான, அச்சான இன்னொரு பெயர் தான் வாழ்க்கை! 
  ஆகவே தான், வாழ்க்கைக்கு உண்மை-உண்மை நிலை ஜீவநாடியாகவும், ஜீவகீதமாகவும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/120&oldid=1377244" இலிருந்து மீள்விக்கப்பட்டது