பக்கம்:அமுதவல்லி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

அமுதவல்லி

டைந்தாள் ரத்தக் கண்ணிர் மடை உடைகிறது. மடையை உடைக்கிறது.

அழகான முகம் முழுவதிலுமே அடிபட்ட ரணங்கள் பளிச்சிட்டன.

நெற்றிப் பொட்டுக்கு மேலே மண்டை பிளந்து விட்டாற்போன்று எலும்புகள் திமிறித் தெறித்தன!

மூச்சிறைக்க ஓடிவந்த நாட்டு வைத்தியர் நிதா னம் காத்து, அழகுச் சிங்கம் சிங்காரவேலனின் நாடியைச் சோதித்தார். ‘ஆத்தாடி! உம் புட்டு அருமை பெருமையான மச்சானோட அன்பான உயிர், சிவலோகம் பறிஞ்சு பொழுது உண்டனவே ஆகிடுச்சு, ஆத்தாளே!” வைத்தியர் செருமினார்.

“ஐயையோ! எம் புட்டு ஆசை மச்சானே! நிலை குத் தின பார்வையில் சிலையான பூங்கா வனம், மீண் டும் ரத்தக் காட்டேரி ஆகிறாள்: ‘'என்னோட நேச மச்சானை இப்படி அநியாயமாகச் சாகடிச்ச அநியா யக்காரப் பாவி யாருன் னு தெரிஞ்சா, அவனைத் தேடிப் பிடிச்சுக் கடிச்சு குதறி அந்தப் படு பாவி யோட உயிரைக் குடிச்சுப் புடுவேனாக்கும்!’ வின் முட்டி மண்முட்டக் கூக்குரலிட்டாள்!

மறு இமைப்பில், சிங்காரவேலனைப் பலிவாங் இய அந்தப் பாவியைக் கைகளைக் கட்டிய வண்ணம் பரபர வென்று இழுத்து வந்து நிறுத்தினார்கள் ஊர் இள வட்டங்கள்!

பூங்காவனம் ஏறிட்டு விழித் தாள், மின் அதிர்ச்சி 蠶 நிலைகுலைந்தாள்: “அட பாவி வீரமுத்து...! நீயா?

வீரக் கண்ணகியாக நீதிமுழக்கம் செய்து, வீரத் தமிழச்சியாகப் பாய்ந்த பூங்காவனம், வெறி தீர வீர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/126&oldid=1459991" இலிருந்து மீள்விக்கப்பட்டது