பக்கம்:அமுதவல்லி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

அமுதவல்லி

கிறுக்குப் பிடித்தவளாகத் தலை முடிகளைத் தாறுமாறாகவே பிய்த்துக் கொண்டவள். அடுத்த கணம் தன் கழுத்துத் தாலியையும் பிய்த்து எறி கிறான்!

‘தங்கச்சியோ...’

வீரமுத்துவின் ஆசைக் கண்ணாட்டி பவளக் கொடி நா தழ தழக்க விம் முகிறாள்.

வெறிச்சோடிக் கிடந்த சூன்யத்தை வெறித்த வாறு, நடந்த கதையை நைந்த குரலில் பேசி நின்றாள் பூங்காவனம்.

“எம் புருசன் குடிபோதையிலே லாரியை உன் மச்சான் மேலே ஏத்திக் கொன் னுப்புட் டாகளா? தங்கச்சிப் பொண்னே...! எம் மச்சான் எங்க கண்ணாலத்துக்கு முந்தி குடி காரராக இருந்தது வாஸ்தவம்தான்; ஆனா, என்னைக் கட்டிக்கிட்டப் புறம், குடியை மறந்து, மெய்யாலுமே நல்ல குடிமக னாக மாறிப் பூட்டாங்களாக்கும்! தங்கத் தாலி மின்னிப்பளிச்சிடக் கருவத்தோடு பேசினாள் பவளக்கொடி. .

மெய் நடுங்கப் பொறி கலங்கி மலைத்து நின்றாள் அபலை பூங்கா வனம்.

பவளக்கொடி செப்பினது மெய்யா லுமே சத்தி வந்தானோ? அப்படின் னா, என் அருமை மச்சானோட பெருமையான உ.சிரைப் பறிச்சுக்கி ட்டது பாழும் விதியேதானா? வீரமுத்து ஒடுங்கி நின்ற திசைநோக்கி மறு கி நடந்தாள். நெருக்கமாக வீர முத்துவை நெருங்கினாள்! கொஞ்சம் முந்தி தான் துப்பிய எச்சில் இன்னமும் காயாமல் இருக்கவே, சுங்கடி முந்தானையைக் கொய்து எச்சிலின் ஈரத் தைத் துடைத் தாள், பூங்காவனம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/128&oldid=1459993" இலிருந்து மீள்விக்கப்பட்டது