பக்கம்:அமுதவல்லி.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறு மூகம் ፲ 2?

தலை நிமிர்ந்து கண்ணிர் வழிந்தோட நின்ற வீரமுத்து, வாயைக் குவித்து ஊதினான். கள்ளச் சாராயத்தின் கெட்ட வாடை, நெடி எதுவுமே தடயம் காட்டவில்லை!

“அயித்தை மகளே பூங்காவனம்! பவளக் கொடிக்கு நான் திருப்பூட்டினதிலேருந்து என்னைக் குடியை மறக்கச் செஞ்சு, என்னை அசலாகவே நல்லவனவாகவும் மாற்றிப்புட்டா என் தெய்வம் பவளம்...! சாமி சத்தியமாச் சொல்லுறேன்; நான் உன் தாலியைப் பறிச்சுக்கிடப் போறதாக ஆத்திரத்தினாலே சவால் விட்டது. மெய்யான சங்கதிதான்! ஆனா, அந்தச் சபதத்துக்கும் இப்பைக்கு நடந்த விபத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆவணத் தாங்கோட்டை - பனங்குளம் நெடுஞ்சாலையிலே நான் என்னோட சொந்த லாரியை வெரசாய் ஒட்டிப் போய்க்கிட்டு இருந்தேன். ஒரு மடக்கத்திலே நான் என் லாரியைத் திருப்பின சமயத்திலே, அந்தஆள் அது தான் உன் மச்சான், அத்து மீறிக் குடிச்சவர் கணக்கிலே தள்ளாடித் தடுமாறி வந்துக் கிட்டிருந்தார். ஒதுங்காமல் கொள்ளாமல் தன் போக்குக்கு தலை சுத்தினாப்பிலே நடந்து வந்தவர், லாரி மேலே மோதிக்கிட்டு மண்ணிலே சாய்ஞ்சிட்டார்: நான் பாடுபட்டு பிரேக் போட்டும், லாரியைக் கட்டுப்படுத்த முடியலே! தடம் மாறாமலே விழுந்து கிடந்த உம்மச்சான் மேலேறிடுச்சு உம் மச்சானோட அருமையான உயிர் பறிபோனதோடே விதியோட விளையாட்டும் முடிஞ்சிருச்சு இது தான் ஆத்தா சத்தியமாய் நடந்த நடப்பு என்னை நம்பு-பூங்காவனம்’ வீரமுத்து புலம்பி அழுதான்.

எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/129&oldid=1376542" இருந்து மீள்விக்கப்பட்டது