பக்கம்:அமுதவல்லி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

# 28 அமுதவல்லி

பூங்காவனம் இப்போது அழவில்லை! அப்புடீன்னா, சட்டத்தோட நீதிக் கூண்டிலே குற்றவாளியாய் நிறுத்தப்பட வேண்டியது மெய்யாலுமே விதியே தானா? நடந்தாள். அருமை பெருமை வாய்ந்த மச்சான் சிங்காரவேலனை மறுபடி அண்டினாள்; முகத்தோடு முகம் பொருத்தி ஒர் அரைக் கணம் அமர்ந்திருந்தாள்! மறுகணம், அவள் முகம் சுழித்தா ள்; முகம் சுளித்தாள்! உன் மச்சான் அத்து மீறிக் குடிச்சிட்டது கணக்கிலே தள்ளாடித் தடுமாறி வந்துக்கிட்டிருந்தார்!’ வீரமுத்துவின் வாய்மொழி களிலே விதி சிரித்ததோ, இல்லை வினை தான் சிரித் திருக்குமோ?

அப்போது

அங்கே

அருமை பெருமை மிகுந்த, ஆசையும் நேசமுமான அன்பு மச் சான் சிங்காரவேலனிடம் வெறும் பிணவாடையை மட்டுலுந்தானா பூங்காவனம் நுகர்ந்து உணர்ந்தாள்...? சே...!

“ஆத்தாளே.. அதுவரையிலும் ஒரு பாவமும் அறியாமலே இருந்திட்ட எம்மச்சானை சமுதாயக் குற்றவாளியாக ஆக்கி, என்னையும் பாவிப்பட்ட தொரு சென்மமாக ஆக்கி, அபூர்வமாச் சோடி சேர்ந்த எங்களைச் சோடி சேர்ந்தே அலங்கோலமாச் சோதிச்சுப்புட்டியேடி-ஆத்தாளே?”

வேரறுந்த சரக்கொன்றையென மண்ணிலே சரண் அடைகிறாள் பூங்காவனம்! வாய் திறக்க, அவளுக்கு இனிமேல் என்ன மிச்சம், மீதி இருக்கிறதாம்?-அந்த விதிக்கும் தான் இனி, என்ன விட்ட குறை, தொட்டகுறை இருக்கப் போகிறதாம்...?

பாவம்... !

பாவம், விதி...!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/130&oldid=1376547" இலிருந்து மீள்விக்கப்பட்டது