அமுதவல்லி
“நண்பா, வெற்றி எனக்கே தான், தீட்டிய இடத்திலேயே பதம் பார்க்கக் கனவு காண்கிறாள் பேதை பார்வதி. எனக்கு வெறி ஏறுகிறது. அது புகழ் வெறி: கலைவெறி! நான் பயில்வித்தேன். அவள் புகழ் பெறட்டும்; ஆட்சேபணம் ஏதும் எனக்குக் கிடையாது. ஆனாலும், பெண் பிறவிக்கு அகந்தை கூடா தல்லவா? பார்க்கலாம், யாருக்கு வெற்றி என்று : தமிழ்க்கலைக் கூடம் இன்று இரவு வழங்கப் போகும் தீர்ப்பைக் கண்டு உலகம் மூக்கில் விரலை வைக்கப் போகிறது. அவளுடைய விசிறிகள் தேவைப்படத்தான் போகின்றன. நீலகண்டா, நல்ல காலம், அந்த சிவசக்தி நடனத்தை எனக்கு நீ நினைவுபடுத்தினாப்!”
“ஆமாம்...’
‘வெற்றி இந்தப் பார்வதி கொழுநனுக்கே தான்!’’
‘என்ன, பார்வதி கொழுநனா?”
“ஆம்; சிவன் என்று அர்த்தம்!”
‘ஒஹோ!’
“ஆஹோ!’
‘ஆஹா அற்புதம்!... தாம் தித் தாம், தை தித்தை!. வெகு நேர்த்தி!...”
“சிவபிரானும் பார்வதியுமே நேரில் பூலோகத்துக்கு விஜயம் செய்து விட்டார்களா, என்ன? ஆஹா!