அமுதவல்லி
“விசித்திரமான புராணக் கற்பனை !’ ‘அதிசயமான போட்டி!’
‘அர்த்தமில்லாத காதல்!” “அற்புதம்!”
மோசம்...படுமோசம்!”
‘நீ பெண் அல்ல!...பேய்! காளி! இவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்திலே நீ அந்தப் பயலுக்குப் போட்டியாகக் காலைத் தூக்கிச் சமமாக நடனம் ஆடி விட் டாயே? நிருத்ய ஆசிரியரின் மகனான நானா-இந்தச் சோமநாதனா இனி உன்னை ஏறெடுத்துப் பார்ப்பேன்? அது வெறுங்கனவு. சில பிரானுடன் போட்டிபோட்டுத் தோற்ற அந்தக் கல்வழகி - எல்லைச் சக்தி கூட உன்னுடைய இந்தத் துணிச்சலைக் கண்டுதில்லை கவிழ்ந்திருப்பாளே? நீ பெண்ணா? நீ காளி!... மகா துர்க்கை!... ஒடு, திருவாலங்காட்டை விட்டுத் தில்லைக்கு ஒடு!...”
“ஆண்மையுள்ள ஆணழகரே, நிறுத்துங்கள் உங்கள் சொற்பொழிவை. நான் பெண்; அசல் தமிழ்ப்பெண். உலகம் தெரிந்தவள்தான் நான். அந்தத் தில்லைச் சக்தியா நான், அப்படிக் கால் தூக்கி நடனம் ஆடாமல் இருக்க? நான் பார்வதி அல்லவா? பார்வதி ஒரு நாளும் அந்த துரைராஜனுக்குத் தோற் றவள் அல்ல! ஞாபகம் இருக்கட்டும், மிஸ்டர் சோம நாதன் தாங்கள் இனி என்னை ஏறெடுத்துப் பார்க்கவே வேண்டாம்; கண்களை மூடிக்கொண்டு ஜபம் செய்யுங்கள். நீங்கள் கண்ணை மூடுவதற்கு எவளாவது ஒர் அபலை வந்து உங்கள் கண்களைத் திறப்பாள்...’ -