பக்கம்:அமுதவல்லி.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. இட்டார்க்கு இட்ட பலன்

ஒன்று

கஞ்சிப்பொழுது, மண்பட்ட பாதங்களைப் புண்ணாக்கும் வெயில்; இடையீடு விட்டு வீசியது அனற்காற்று.

கிழவி செல்லாயிக்கு ஏப்பம் பறிந்தது. அது பசிஏப்பம்: அதில் ஓரளவு தண்ணீர் ஏப்பமும் கலந்திருந்தது. பவளக்கொடியைப் பார்த்து மறுபடி அவள் கை ஏந்தினாள்.

“பாட்டி, இன்னம் தாகம் அடங்கலையா?” என்று கேட்டாள் பவளக்கொடி..

குடிக்கறதுக்கு இல்லேம்மா; மூஞ்சியிலே தெளிச்சுக்கிட்டா ஒண்னுக்குப் பாதியா சொகமாயிருக்குமில்லே அது க்காவத் தான்!”

‘ கட்டைத் தூக்கி விடட்டுமா, பாட்டி?’ “ஆமாம்மா!’ “ஏம்மா, சீமோடு வீட்டுச் சின்னையா அம்பலக்காரர் பொண்னு தானே நீ?”

‘இல்லை, நாட்டோடு வீட்டு நல்ல தம்பித்தேவர் மகள்!’

“தடங்கெட்டுப் போச்சு, தாயி. நீ பதினாறும் பெத்துச்சொகமா வாழனும்மா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/138&oldid=1376570" இருந்து மீள்விக்கப்பட்டது