பக்கம்:அமுதவல்லி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதவல்லி

நரம்போடிய பழைய நாட்களை அவள் எண்ணிப் பெருமூச்செறியும் நிலையில் அவள் இல்லை. சுயநினைவு கிடையாது; கணப்புக் குழியின் தலை மாட்டில் படுத்துக் கிடப்பது போன்ற பிரமை ஒரு சமயம்; மறுகணம் சாரலில் அகப்பட்டுக் கொண்ட மாதிரி ஒரு நடுக்கம். நெற்றியும் நெஞ்சும் கூத்து மேடை ஆயின. அவள் கைப் பிடித்த மணவாளனும் ஈன் றெடுத்த தனயனும் தோன்றாமல் இருந்தனர். உள்வாத்திடைச் சூழ்ந்த இருள் குடிலையும் கப்பியது. பொக்கைவாய் ஓரங்களில் கண்ணிர் அணைந்தது. அவளையும் மறந்த நிலையில் அவளுள்ளே ஏதேதோ கனவுகளும் காட்சிகளும் சோபனம் கொட்டின.

உடலைத் தீண்டிய உணர்வு ஏற்பட்டதும். அவள் விழி மலர்ந்தாள்; அகல்விளக்கு எரிந்து கொண்டிருப்பதைக் கண்டாள்.

“நான் தான் முருகன், செல்லாயி அக்கா!” என்ற குரல் கேட்டது. வயது சென்றவன் ஒருவன் உட் கார்ந்திருந்தான். அவள் நிலை உணர்ந்து ‘சுக்குத் தண்ணி வைத்துக் கொணர்ந்திருந்தான் அவன்; பக்கத்துத் தோட்டம்தான் அவனுக்கு அரண்மனை

நல்ல மனம் தான் அவனுடைய சொத்து போதாதா?

‘ஒரு மெடறு குடிச்சுப்புடு, அக்கா!’

“யாதொண்ணும் எனக்கு வேணாம்; தானு: இனி யாருக்காக உசிரோடே வாழனும்?. . இம்புட்டுக் காலமா நானும் ஏதுக்கு பூமிக்குப் பாரமா இருந்தேன்னு எனக்கு மட்டும் படலை!...” .

முருகனின் கைப்பிடியிலிருந்த லோட்டா நடுங்கிக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/142&oldid=1376579" இலிருந்து மீள்விக்கப்பட்டது