பக்கம்:அமுதவல்லி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ் ஆறுமுகம்

145


 கூன் விழுந்த முதுகு மேலும் குறுகி வளைந்தது பட்டிக் காட்டு மண்ணும், பாடுபட்டு உழைத்த உழைப்பும் அவளைக் கண்டு எள்ளி நகையாடினவோ? பின், ஏன் கந்தசாமி அப்படிச் சிரிக்கிறான்?. எரியும் காளவாய் ஏன் அவ்வாறு நகைக்க வேண்டும்?

‘சரிப்பா தம்பி, சரி!... நீ எம்பணத்தை அப்படியே பத்தரமாப் பூட்டி வச்சுக்க; சல்லிக் காசு கூட எனக்கு வேணாம். நான் வாரேன்!... ம்ம்... காளி ஆத்தா!...”

ஐந்து

மெய்யாலும் நானு இனிமே உசிரோட விருக்கவே படாது!...”

கடந்த ஐந்து நாழிகைப் பொழுதாக செல்லாயிக் கிழவிக்கு இ ந் த ஒ ர் எண்ணம் தான் மேலோங்கி நின்றது. எட்டாத் தொலைவும், பயம் மண்டின காடும், விடுதலை தர வல்ல குன்றுகளின் கூட்டமுமே அவளுடைய சிந்தையில் சுழன்றன. வழி நாள் அவளுக்குப் பயம் காட்டிற்று; இது பரியந்தம் ஒண்ட இடம் தந்த அந்த மண் மாதாவுக்குக் கடைசி வணக்கம் சொல்லி விட்டுப் புறப்பட்டாள் அவள். ‘நாளைக்கு நீ கட்டையைப் போட்டுப்பிட்டா, அனாதைச் சாவுன்னு சொல்லி ஒன்னோட , சொந்தக்காரனான என்னைப் பாத்து ஊரு ஏசுமே? ... , என்ற கந்தசாமியின் சொற்கள், அவள் காதுகளில் எதிரொலித்தன. என்னைப் படச்ச ஆத்தாவுக்குக் கூட இனிமே என்னாலே ஒரு தொல்லையும் இருக்காது!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/147&oldid=1376648" இலிருந்து மீள்விக்கப்பட்டது