பக்கம்:அமுதவல்லி.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஆறு

‘இந்தா பாட்டி, உன் பணம்!’ பவளக்கொடி நின்றாள்.

‘ஏது கண்ணு?’ சிலையானாள் கிழவி.

‘நீங்க கந்தசாமி அண்ணாச்சியிடம் கொடுத்து வச்ச பனந்தான் இது. இந்தா, எண்ணிக்க: சரியா இருபத்தேழு ரூபா இருக்கு. காலம்பற குடிக்காட்டிலே நீங்க ரெண்டு பேரும் தர்க்கம் பண்ணிக் கிட்டதை நான் சோளக்கொல்லை மறைவிலேருந்து ஒட்டுக்கேட்டேன். நீ வீட்டுக்குப் போனதும், அந்த அண்ணாச்சியோட வம்பு பண்ணி. பணத்தைக் கறந்து கிட்டு வந்திட்டேன்!’’

‘நீ மகராசியாக எளுதிக் கெடக் கணும், தாயே!”

நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அவளுக்குக் கனவு போன்றே தென் பட்டது. ரூபாய்த் தாள்கள் சில, கிழவியின் மெலிந்த வலது கைக்குள் அடங்கின.

‘இனி ஒரு பத்து இருபது நாளைக்கு வேணுங்கிறதை நல்லாச் சாப்பிடு, பாட்டி!’ என்றாள் பவளக் கொடி.

‘ ஆமா ஆமா. நான் அக்காளைக் கவனிச்சுக்கிறேன், தங்கச்சி!’ என ஆறுதல் தெரிவித்தான் முருகன்.

“இரு பவளக்கொடி, கடைலேருந்து சுடுத் தண்ணி வாங்கியாராச் சொல்றேன்! நீ தாம்மா இப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/149&oldid=1376668" இருந்து மீள்விக்கப்பட்டது