பக்கம்:அமுதவல்லி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அமுதவல்லி


 எனக்குக் கைக்கு மெய்யான சாமி!-வழிந்தது ஏழை மனம்,

அப்போது, “பாட்டி , உங்க கந்தசாமி ரேக்ளா வண்டியிலே யிருந்து உருண்டு விழுந்து கெடந்ததைக் கண்டு மணியக்கார ஐயா வண்டியிலே தூக்கிப் போட்டாந்திருக்காக; வழியிலேயே உயிர் போயிட்டுதாம். அவரு பெண்சாதிக்கு சொல்வி அனுப்ப வேணுமாம்; பிணத்தை அடக்கம் செய்யணும்; தம் பிடி காசு அங்கே, இல்லையாம்!...” என்று துயரச் செய்தியை வெளியிட்டான் ஒருவன்.

‘நெசம்மாவா?... ஐயோ... கந்தசாமி!...”*

ஒப்பாரி வைத்தாள் கிழவி. அடுத்த இமைப் பொழுதில் செல்லாயி ஓட்டமும் நடையுமாகச்

சென்று கொண்டிருந்தாள்.

“நானு ஒருத்தி உசிரோட இருக்கிறப்போ, எங்க கந்தசாமித் தம்பி எப்பிடி நாதியத்தவனாவான்...??

இருபத்தேழு ரூபாய் கூட்டுச் சேர்ந்து சிரிக்கலாயின!

ஏழு

பிறைக் கீற்றுக்கு அடியில் அமர்ந்திருந்தாள் பவளக்கொடி,

காளி ஆத்தாள் விளையாட்டு வேடிக்கையாத்தான் அமைஞ்சிடுது!...ம். என் தந்திரம் கடைசியிலே மண்ணாயிடுச்சு! ஆனா, பாவம், மண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/150&oldid=1376673" இலிருந்து மீள்விக்கப்பட்டது