பக்கம்:அமுதவல்லி.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 8. தவம்

   பட்டுக்கோட்டை - அறந்தாங்கி நெடுஞ்சாலை!"
  “ஃபிலிப்ஸ் அசுரகதியில் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இன்னமும், வேகம் என்றால், அப்படி யொரு வேகம். ஆனால். ஒரு விசேஷம்: வேகத்திலும் ஒரு நிதானம் எச்சரிக்கைப் பண்போடு பிடிகொடுக்காமல் இல்லைதான்.

கீரமங்கலம்!--பராக்!

  சோமையா இப்போது நுட்பமான எச்சரிக்கை பெற்றான். பிறந்து:வளர்ந்த ஊருக்கு வழிவிட்ட. வழிகாட்டிய கப்பிப் பாதையில் ஹாண்டில் பாரை மடக்கினான். பெடல் இயக்கமும் சீரடைந்தது. புதிய தியேட்டரை ஏறிட்டுப் பார்த்தபோது, அவ னுக்குச் சுரீர்” என்ற ஒர் உணர்வு சுட்டது. அன்றைக்கு மயிரிழை தப்பியிருந்தால், அந்தக் குடி கார லாரி டிரைவர் சட்டினி ஆக்கியிருப்பானே அவனை? யார் செய்த புண்ணியமோ, சோமையாவும் பாவத்தைச் சுமக்க நேர்ந்து விடவில்லை. அவன் தப்பினான்; தில்லை நாயகியின் மாங்கல்யமும் தப்பியது. பாவம், தில்லை! இமைகளின் கீழ் வரம்புகளிலே மெல்ல மெல்ல ஈரம் படர்வதை அவன் உணராமல் இல்லை தான்,
 எதிரும் புதிருமாகக் கடைத்தெரு,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/152&oldid=1378528" இருந்து மீள்விக்கப்பட்டது