பக்கம்:அமுதவல்லி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 51 __________________________________

    அந்தி மயக்கத்தில் கும்பல் கும்பலாகக் கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் புதிய அரசியல் கால் மாடு, தலை மாடு தெரியாமல் அகப்பட்டு விழித்தது.
   ஆனால் சோமையா விழிக்கவில்லை. பதமாக இறங்கினான். கதர்ச்சட்டையில் படிந்துவிட்டிருந்த புழுதியைத் தட்டி விட்டான். கழுத்து வேர்வையை வழித்தான். வண்டியைத் தள்ளியபடி நடந்தான்.
  "வாங்கங்கறேன் , தம்பி!"
  சின்னப் பிள்ளையாகி, அடிக் கரும்பைக் கடித்துச் சுவைத்துக் கொண்டிருந்த சேர்வை இப்போது கூலி கொடுக்கப் போகிறாரா அல்லது கூலி கேட்கப் போகிறாரா?
 "காளி காபி சரக்குப் பெட்டியைத் திறந்தான் லைன் மேன் சோமையா. பெட்டி தள்ளாட்டம் போட்டதும் தான், சைக்கிகளுக்கு ஸ்டாண்ட்” போடாதது விளங்கிற்று. குறுக்கு மறித்து நடந்து சென்ற அழகி ஒருத்தியும் வாண்டுப் பயலும் அவன் சிந்தையைக் கலக்கி விட்டிருக்கலாம்- பார்வதி!பாபு:- கண்கள் இரண்டையும் மூடி, மெய்ம்மறந்த நிலையில் அவன் தன் னுள் தனக்குத் தானே- தன்னில் தானே முணமுணத்துக் கொண்டான். மூடியிருந்த கண்கள் மூடி கழன்று திறந்த நேரத்தில் அவன் நெஞ்சம், தில்லை நாயகி.!. பாபு என்று உரு கியது; ஏக்கமும் தவிப்பும் அவனை ஆட்கொண்டிருக்க வேண்டும்!
   "தம்பி!...”
   சோமையா சுயப்பிரஞ்ஞை கொண்டான். கடமையில், காரியத்தில் என்றுமே அவன் விழிப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/153&oldid=1378530" இலிருந்து மீள்விக்கப்பட்டது