பக்கம்:அமுதவல்லி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 அமுத வல்வி __________________________________

போடு செயல்படுபவன் தான். என் றாலும், அவனும் சராசரியான ஒரு மானுடப் பிண்டம் தானே? இளமையின் மிடுக்கு கம்பீரமாகத் துவங்க, வியாபாரப் பண்பின் பான் மை நிறக்க “ஐயாவுக்கு வாடிக் கைப்படியே இந்த வாட்டியும் சரக்கு போட்டுப்பிடுறேன்.” என்று தாக்கீது கொடுத்த வண்ணம், ஒரு கிலோ ஏ. காப்பி, இரண்டு கிலோ ரோ பஸ்டா, அரை கிலோ ப்யூர், கால் கிலோ சிக் கிரி, ஒரு பண்டல் தேயிலைத் துரள் என்று சரக்குப் பொட்டணங்களை கல்லாப் பெட்டியின் மேல் தட்டில் அடுக்கலானான். நிலுவைச் சிட்டையில் 'பார்ட்டி"யின் கையெழுத்தை வாங்கிக்கொண்டான். விளக்கெண்ணெய் ஊற்றிக் கொடுத் தகையோடு கையைத் துடைத்து விட்டு, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக எண்ணிச் சரிபார்த்து நீட்டிய போன வாரத்து நிலுவைப் பாக்கி ரூபாய் முப்பத்தெட்டு, பைசா நாற்பதையும் வாங்கி தன் பங்கிற்கும் கவனமாக எண்ணிச் சரிபார்த்த பின் தன்னுடைய பர்சு"க்குள் திணித்துக் கொண்டான் சோமையா. விடைபெற். றான். புதிய வாடிக்கை இந்தச் சனிக்கிழமையும் குதிரவில்லை. அடுத்த வாரமும் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் முதலாளிச் செட்டி யாருக்கு அவன் பேரில் விழுந்திருக்கின்ற நல்ல அபிப் பிராயம் மேலும் வல்லமை பெற வாய்க்கும்!-- உண்மைதான்!

  ஆவணத் தாங்கோட்டைச் சாலை வந்தது.
  வாரத்துக்கு வாரம் புதிது புதிதாகக் கடை கண்ணிகள் மாயாஜாலம் போல முளைத் துவிடுகின்றவே! அண்டையில் டூரிங் சினிமா வேறு ஆரம்பமாகி விட்டதல்லவா?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/154&oldid=1378533" இலிருந்து மீள்விக்கப்பட்டது