பக்கம்:அமுதவல்லி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 153 __________________________________

சோமையா பட்டுக் கோட்டையில் சாயா அருந்தியவன் இருபத்தைந்து தொலைகல் மிதித்து வந் திருக்கிறான். அடுத்த டீயை போஸ் அடித்துக் கொடுத்துத் தான் சாப்பிடுகிறான். விதிமுறையின் ஒழுங்கில் அவனுக்கு ஒரு நம்பிக்கை; ஓர் ஈடுபாடு,

அவன் இனி ஸேல் ஸ்மேன் சோமையா.

சில்லறை வியாபாரம் சில்லறைக் காசுகளைக் கூட்டியது.

மின் விளக்குகள் எரியத் தலைப்பட்டன.

மின்னல் பாய்ந்த மாதிரி அரை வினாடி மெய் சிலிர்த்து நின்றான் அவன். மண் வாசனையில், கூப் பிடு தொலைவிலிருந்த அவனது பிறந்த மண்ணின் நெடியை அவனால் அப்பொழுதுதான் உணர முடிந்தது போலும்!

வேலு பூ கொடுத்தான். இரண்டு முழம் செவந்தி: கொஞ்சம் கன காம்பரம்; துளி கதம்பம். இருபத் தைந்து காசுக்குக் கிராக்கி என்று சொல்லலாமா?

பூப்பொட்டலத்தை வாங்கினான் சோமையா. பூக்கள் மனத்தன. நறுமணத்தின் பின் புலத்திலே தில்லை நாயகியின் அன்பு முகம் ஆசை முகமாகி நெடி பரப்பியது. தில்லை :- அவன் தன்னை மறந்த லயத்தில் சொக்கிப்போனான். தில்லை நாயகி அழகு காட்டினாள்- நெஞ்சுக் குழியில் அன்பு கூட்டி னாள்- மன வீணையில். ‘என்னோட தலையெழுத்தின் ஐந்தொகை கணக்கிலே எனக்கிண்ணு ஏதோ

 அ-10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/155&oldid=1378535" இலிருந்து மீள்விக்கப்பட்டது