பக்கம்:அமுதவல்லி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 அமுதவல்லி __________________________________

கொஞ்சம் புண்ணியமும் வரவு ஆகியிருக்கவேணும். அதனாலே தான் , எனக்கு அன்பு காட்ட இன்னொரு மகாஜி கிடைத்தாள் என்னோட பாபுவுக்கு இன்னொரு அம்மா கிடைச்சிருக்கா!... நன்றிய றிவு கண்களில் பொடித்துக் கசிந்தது.

இப்போது, அவன் அந்தப் பூப்பொட்டணத்தை மூக்கின் முனையில் வைத்து நுகரலானான் . அவனுக்கு மேனி நடுங்கத் தலைப்பட்டது; புல்லரிப்பும் கிளர்ந்தெழுந்தது. ஆமாம்; பார்வதி, பூப்பொட்டலத்தைக் கையேந்திப் பெற்றுக் கொண்டவுடன் இவ்வாறு தான் மலர்களின் வாசனையை அனுபவிப்பாள், பார்வதி என்றால் பார்வதி தான்!. பார்வதி! என் கன வுக்கிளியே! என்னோட பிரியமான அன்பரசியே! - உயிர் விம்மியது; பொருமியது: செருமியது. என் பார்வதி இப்படித் திடுதிப்பென்று தெய்வமாக ஆவதற்கென்று தான் அப்படிப் பெண் தெய்வமாகி எங்களது தாம் பத்யத்தை வழி நடத்திக் காட்டி னாளே?’.

   வாழ்க்கை ஒரு விடி காலைக் கன வுதானோ?
   பார்வதி அவன் வரை ஒரு கனவுக் கிளியாகத் தான் அழகு காட்டி விளையாடினாள். முறைமைப் பெண் ஆயிற்றே? கனவுக்கிளி ஆசைக்கிளியாக்கிக் கொள்ள அனுசரணை புரிந்த அதே விதி, அந்த ஆசைக்கிளியை மறுபடி அவனுடைய கனவுக் கிளியாக உருமாற்றித் தொலைக்க வேண்டு மா?

உள்ளம் வீரிடுகிறது.

விதிக்கு அழத் தெரியாதோ?

மரணப்படுக்கை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/156&oldid=1378538" இலிருந்து மீள்விக்கப்பட்டது