பக்கம்:அமுதவல்லி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 157

ஆனால் வந்த முன் நிலவும் இராத் தங்காதது தானே ?

டைனமோ தயார்.

ஃபிலிப்ஸ் காரினும் கடிது சென்றது. (கார்மேகம் மட்டிலும் அல்லவே)

சோமையா சுருள் அலை படிந்த முடி இழைகளை ஒரு கையால் நீவி ஒதுக்கி விடுவதும், மறு கையால் சட்டைப் பையில் துருத்திக் கொண்டிருந்த மணிபர் ஸை"த் தடவிப் பார்ப்பதுமான ஒரு சித்து விளையாட்டில் ஒன்றிப் போயிருந்தான். வேர்வைக் கென்ன கேடு, பாபுவைப் பார்க்க வேண்டாமா? தில்லை நாயகி பாவம், வழிமேல் விழி வைத்து என்பார்களே, அப்படிக் காத்திருப்பாளே,... தவம் இருப்பாளே?...தவம் எனில். அவ்விதம் ஒரு தவம்-ஆன்ம நேயத்தவம்; ஆத்ம சமர்ப்பணத் தவம்.

அன்பு ஒரு தவம் இல்லையா?

பாசம்...?

அதுவும் தான்! அப்பால், நேசம்...?

நேசமும் ஒரு தவம் தான் !

அன்பு, பாசம், நேசம் என்னும் படியான இம்மூன்று புள்ளிகளும் அமைகிற அல்லது. அமைத்துக் கொடுக்கிற முக்கோணம் வெறும் முக்கோணமல்ல-- சிவப்பு முக்கோணம் தான் வாழ்க்கையின் அல்லது வாழ்க்கைக்கான தோற்றமா? தத்துவமா? நியதீயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/159&oldid=1377990" இலிருந்து மீள்விக்கப்பட்டது