பக்கம்:அமுதவல்லி.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 159 நாளை ஞாயிற்றுக்கிழமை. லீவு நாள். தில்லை நாயகியை அவசியம் அழைத்துவந்து படம் காட்டவேண்டும்!- பாபு இல்லா மலா? ஹாப் பாபு!.படு சுட்டிய டா, பாபுப்பயலே!...

அவர்கள் படம் பார்த்து ஐந்தாறு மாதங்கள் இருக்க வேண்டும். என்ன செய்யட்டும்?...வாழ்க்கை ஒரு சோதிப்பே தானோ?

அந்தச் சந்துக்குப் பெயர் தான், கள்ளர் சந்து, இந்தக் கள்ளர்கள் மறவர் இனம்,

சோமையா நிதானம் ஆனான்.

இங்கே தான் அவன் வீடு: வாடகை வீடு.

பெண்டாட்டியையும் பிள்ளையையும் பார்த்து விட்டு அகம்படியர் தெருவில் பாய்ந்து சந்தைப் பேட்டைக் கடைக்குப் பறந்து விட்டால் என்ன ?

ஊஹும் !

கூடாது!

பணம் இருக்கிறது.

சந்து முனையில் சிவனே என்று கால் கடுக்க நின்று ஒற்றைக் கால் தவம் இயற்றும் அந்த வீதி விளக்கின் விதி அப்போது இருளடைந்திருந்தது.

என்றாலும், ஒரு நிதானத்துடன் பெடலை அழுத்தி மிதித்தான்-நேர் வசத்தில்.

‘அடி, என்னடி. ராக்கம்மா!’ என்று பாட்டைக் கொலை செய்த பாவத்தைச் சுமந்து கொண்டு ஆனால் உடலைச் சுமக்க வகை புரியாதவன் போன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/161&oldid=1378007" இருந்து மீள்விக்கப்பட்டது