பக்கம்:அமுதவல்லி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 அமுதவல்லி

யாரோ ஒருவன் தள்ளாடித் தள்ளாடி எதிரே அப்படியும் இப்படியுமாக உப்புக் கோடு மறித்தான்!

சோமையாவால் சமாளிக்க முடி யாமல் போய் விட்டது. ஆகவே ஒரு பாவத்தைத் தவிர்த்துக் கொண்ட மனிதாபிமானத்தோடு அவன் புழுதியில் இருட்டில் நிலை புரண்டு விழுந்தான்; இடுப்பில் வசமான அடி, வலியைச் சட்டை செய்கிற விவேகமான வேளையா அது? சட்டையை உதறிவிட்டு எழுந் தான்; சைக்கிளைப் பரிவுடன் தூக்கினான்.

அப்போது:

“சோமையா!’ என்ற விளிப்பு இட றியது. விளித்தவர் அவனுடைய ஊர்ப்பேர் வழிலேவா தேவிக் காரர். பிராமிஸ்ரி நோட்டின் பேரில் தூங்கும் கடனான ரூபாய் இரு நூற்றி ஐம்பதைப் பற்றிச் சற்றே கடுமையான முறையில் நினைவூட்டினார்.

சோமையா ரோசக் காரன். ஒலித்த தொனியின் கடுமையை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘அண்ணாச்சி, அளந்து பேசுங்க. பார்வதியோட வைத்தியச் செலவுக்காக ஆபத்துக்கு உதவின உங்களை இனியும் நான் சோதிக்க மாட்டேன். தலையை அடகு வச்சானும் ஒரு வார கெடு விலே உங்க கடனை பைசா சுத்தமாய்த் தீர்த்துப்புடுறேன்:...’ என்று ரோசம் பொங்கச் சொல்லி விட்டுப் பறந்தான் அவன்.

'கானி காபி’ மணத்தது. அதற்குச் சிரிக்கவும் தெரிந்திருந்தது. விளம்பரப் பெட்டிப் பூவை எவ்வளவு அழகாக பிஸினஸ் சிரிப்புச் சிரிக்கிறாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/162&oldid=1378013" இலிருந்து மீள்விக்கப்பட்டது