பூவை எஸ். ஆறுமுகம் 161
செட்டியார் வெற்றிலைப் பெட்டியை லாகவமான சாதுர்யத்தோடு திறந்தவர் டபக் கென்று மூடிவிட்டு, சோமையா, வாப்பா!’ என்று முகமன் மொழிந்தார்.
“வளமையைக் காட்டிலும் இன்னிக்கு ஒரு அரை அவர் லேட்! எந்நேரம் ஆனாலும் சரி, கடைக்கு வந்து கணக்கு வழக்கைச் சொல்லி, பணம் காசை ஒப்படைக்காமல் நீ வீட்டுக்குப் போற பழக்கம் தான் உனக்கு எப்பவும் இருக்காதே? அதிலே நீ ஒருத்தன் தான் ரொம் பக் கண்டிப்பு!” என்றார்.
‘நேரே கடைக்குத் தானுங்க வர் றேன். ஐயா!’
ரைட்!... வந்து. லேவாதேவி சூனா- பானா உன்னைத் தேடி வந்தாக!” -
‘அப்படீங்களா? வழியிலேயே கண்டு கிட்டேன்; தாக்கலும் சொல்லிப்பிட்டேனுங்க!”
செட்டியார் நீளமாக மூச்சு விடலானார் . அது நெடுமூச்சு, சரி, சரி. நம்ப பொழைப்பைப் பார்ப்போம்! கையொப்பம் பெற்று கொடுக்கப் பட்ட சரக்குகளின் விவரம் அடங்கிய நோட்டை எடுத்துப் புரட்டினார் அவர்.
விற்பனை - வாபஸ் விவரங்களை தொண்டையை உச்சப்படுத்திச் சொன்னான் சோமையா. இன்னிக்கு நடந்திருக்கிற வியாபாரத் தொகை நூற்றி எண்பதும் சொச்சத்தைக் கண்டு முதலாளி ஏகமாய்ச் சந்தோஷப் படுவாங்க. இந்தப் புது வருஷத்திலேயாச்சும் சம்பளம் உயர்த்துறாங்களான்னு பார்ப்போம்!